ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வி.சி. மோட்டூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில், ஏழுமலை, சாந்தகுமார், ரமேஷ், இத்தார் ஆகிய நான்கு பேர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விஷவாயு தாக்கியதில் அவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.