ராணிப்பேட்டை மாவட்டம் உத்திரம்பட்டு கிராமத்தில் ஷேர் ஆட்டோவில் சென்ற 7 பெண்கள் மீது தனியார் பள்ளி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 6 பெண்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோ மீது பள்ளி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.