ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு ரூ. 20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து ஒவ்வொரு 3 மாதத்திற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும். இதனையொட்டி, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தேசிய பசுமைப்படை மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்-மாணவிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் இதில் களம் இறங்க உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.