பேரணாம்பட்டு அருகே கல் கம்பங்கள் கடத்திய லாரி பறிமுதல்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, லாரியை நிறுத்த முயன்றனர். போலீசாரைக் கண்டதும் ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டுத் தப்பிச் சென்றார். சோதனையில் லாரியில் 120 கல் கம்பங்கள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியைப் பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி