ராணிப்பேட்டையில் மதுபான கடைகள் இயங்காது- ஆட்சியர் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் (டாஸ்மாக் கடைகள்), மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுகூடங்கள் அனைத்தும் வருகிற 15-ஆம் தேதி (புதன்கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினமான 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மூடவேண்டும். அன்றைய தினங்களில் மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட அரசு டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி