ராணிப்பேட்டையில் பட்டுப்பூச்சி வளர்ப்பு பண்ணையில் தீ விபத்து

ராணிப்பேட்டை மாவட்டம் ரெண்டாடி ஊராட்சி கொளத்தூர் கிராமத்தில் பட்டுப்பூச்சி வளர்ப்பு பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பட்டுப்பூச்சி வளர்ப்பு பண்ணைக்கு செல்வதற்கு போதிய வழியில்லாத நிலையில் தீயணைப்பு துறை அங்கு செல்வதற்குள் பண்ணை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி