கரிவேடு கிராமத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த சுகாதார நிலையம் சமூக விரோதிகளால் சுவர் மற்றும் கைப்பிடி சுவர் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு மது பாட்டில்களும் கிடந்தது. இதுகுறித்து ஆட்சியருக்கு புகார் சென்ற நிலையில், இன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து, பாதுகாப்பான முறையில் வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தினார்.