ராணிப்பேட்டை நகராட்சி 16-வது வார்டில் சியோன் நகர் பகுதியில் கூட்ஸ் ஷெட் ரோடு சாலையில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தில் ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் பிரீத்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார்.
இந்த பகுதி மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று சாலை அமைக்க நடவடிக்கை எடுத்த அமைச்சர் ஆர். காந்திக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி பொறியாளர் பரமராசு, நகரமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி பாண்டுரங்கன், வினோத், கிருஷ்ணன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.