ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை, வாகன விதிமீறல் அபராதம் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில போலி குறுஞ்செய்திகள் மூலம் அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் அதிகாரப்பூர்வ RTO இணையதளங்களில் மட்டுமே அபராதங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான APK கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான சந்தேகத்திற்கிடமான எண்கள் அல்லது செய்திகள் குறித்து புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.