ஆற்காடு பகுதியில் செங்கல் சூளைகளில் மாமூல் கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படும் தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். செங்கல் சூளை உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.