ராணிப்பேட்டை: இருசக்கர வாகனம் மீது கார் மோதி 3 பேர் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் மீது எதிரே வந்த சொகுசு கார் மோதியதில், மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு இளைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் தினேஷ் (20), சாஜன் (26), பாலமுருகன் (19) என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி