பேரணாம்பட்டு பாத்திர கடையில் திருடிய பெண்கள் கைது

பேரணாம்பட்டில் ஆறுமுகம் என்பவர் பாத்திரம் மற்றும் பர்னீச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு 2 பெண்கள் வந்தனர். அப்போது கடையில் ஆறுமுகத்தின் மகன் விஜய் என்பவர் இருந்துள்ளார். கடைக்கு வந்த 2 பெண்களும் தாங்கள் பித்தளை பாத்திரங்கள் வாங்க வந்திருப்பதாக கூறினர். அதற்கு விஜய் பித்தளை பாத்திரங்கள் உள்ளே இருப்பதாக கூறினார்.

உடனே இரண்டு பெண்களும் உள்ளே சென்று பார்ப்பதாக கூறி கவனத்தை திசை திருப்பி அங்கு இருந்த 2 குத்து விளக்குகளை திருடி புடவை முந்தானையில் மறைத்துக்கொண்டு கடையிலிருந்து வெளியேறி செல்லமுயன்றனர்.

இதனை கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்த விஜய் அவர்களை மடக்கி பிடித்து, பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ராசப்பல்லி கிராமத்தை சேர்ந்த சாந்தம்மாள் (வயது 60), லதா (35) என்பதும், சாந்தம்மாள் மீது சேலம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப் பதிவு செய்து 2 பெண்களையும் கைது செய்தார்.

தொடர்புடைய செய்தி