அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளின் பிரிவை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்பு அங்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்து நோயாளிகளிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
மேலும் மருத்துவர்கள் செவிலியர்களிடம் மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும் புற நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.