பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார் பெண்டா மலை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் குடியாத்தம் அக்ராவரம் கிராமத்தை சேர்ந்த உதயகுமார் (வயது 53) என்பவர் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். தற்போது பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்தார். இவர் மாணவிகளை கேலி கிண்டல் செய்து, சில்மிஷத்தில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிமொழி, பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.