வேலூர்: திருட முயற்சித்த வாலிபர் - சிசிடிவி காட்சி

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகே ஓட்டல், டீ கடை, பேக்கரி உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன.இந்த நிலையில், நேற்று (நவம்பர் 26) அதிகாலை 2-மணி அளவில் சிகப்பு நிற டி-ஷர்ட் மற்றும் டிரவுசர் அணிந்த வாலிபர் ஒருவர் ஓட்டலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, ஓட்டலினுல் அங்கும் இங்குமாக பணம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்து பணம் எதுவும் கிடைக்காததால் பக்கத்தில் உள்ள ஒவ்வொரு கடையாக சென்று பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்குள்ள கடைகளில் கல்லாவில் பணம் ஏதாவது உள்ளதா என தேடி பார்க்கிறார்.

பணம் எதுவும் கிடைக்காத நிலையில் விரக்தியுடன் மேம்பாலத்தின் வழியாக செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. 24-மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகம் அருகே ஓட்டல், கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் வேலூரில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்த சிசிடிவி காட்சியினைக் கொண்டு வேலூர் சத்துவாச்சாரி காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் முயன்ற வாலிபர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி