வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை பகுதியை சேர்ந்த ஜல்லிகார்த்தி (48), நகராட்சியில் தனியார் தூய்மைப் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 14-ம் தேதி இரவு கெங்கையம்மன் திருவிழாவின் போது தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (மே 20) உயிரிழந்தார்.