வேலூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகம் மூலம் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 22-ந்தேதி (சனிக்கிழமை) வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. 

தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. முகாமில் 40-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் 10, 12, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம். தனியார்துறை பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி