பேரணாம்பட்டு: சிறுமியை காதலிப்பதாக மிரட்டிய வாலிபர் கைது

பேரணாம்பட்டு அருகே சாத்கர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் அருண் (21) என்பவர், 13 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி மிரட்டி, அவரது புகைப்படத்தை வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கேட்டபோது, அருண் அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மிரட்டியுள்ளார். புகாரின் பேரில் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு விசாரணை நடத்தி, அருண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

தொடர்புடைய செய்தி