வேலூர்: குடியாத்தம் அருகே சிறுத்தை - பரபரப்பு வீடியோ!

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் மற்றும் குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக சிறுத்தை தாக்கி கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில் குடியாத்தம் அருகே உள்ள காந்தி கணவாய் பகுதியில் வனத்துறையினரால் வைக்கப்பட்டிருந்த ஏஐ தொழில்நுட்ப கேமராவில் சிறுத்தை பதிவாகியுள்ளது. அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி