குடியாத்தம்: செப்டிக் டேங்க் குழியில் விழுந்த காளை

குடியாத்தம் அடுத்த பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் சாய் என்பவரது காளை அக்.4 இரவு பாண்டியன் நகர் பகுதியில் செப்டிக் டேங்க்குக்காக வெட்டப்பட்டுள்ள குழியில் தவறி விழுந்துள்ளது.

இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துரையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி செப்டிக் டேங்க் குழியில் விழுந்த மாட்டை பத்திரமாக மீட்டனர். இதனால் பாண்டியன் நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி