குடியாத்தம்: கொலை குற்றவாளிக்கு குண்டல் சட்டத்தில் கைது

குடியாத்தத்தை அடுத்த பரதராமி அருகே உள்ள வீரிசெட்டிபல்லி ஊராட்சி வீ. மோட்டூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 62). ஐஸ் வியாபாரி. இவரது மனைவி மகேஸ்வரி (55). இவர்களுக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் ஆறுமுகம் மகன் மகேந்திரன் (29) என்பவருக்கும் இடையே கடந்த டிசம்பர் 12-ந் தேதி தகராறு ஏற்பட்டது. இதில் குணசேகரனும், அவரது மனைவி மகேஸ்வரியும் வெட்டப்பட்டனர். இந்த சம்பவத்தில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

 கொலை குறித்து பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர். கைதான அவர் மீது பல வழக்குகள் உள்ளன. தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் மகேந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு எஸ்பி மதிவாணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மகேந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி