கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமை தாங்கிப் பேசினார். அப்போது, வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் இறந்த வாக்காளர்கள் குறித்து நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி சரியான தகவல்களைப் பெற்று நீக்க வேண்டும். வெளியூர் சென்ற வாக்காளர்கள் குறித்தும் விசாரணை நடத்தி நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியல்களில் பெயர்களில் பிழைகள் இருப்பினும் அதனைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை நீக்க வேண்டும்.
இளம் வாக்காளர்கள் சேர்க்கை குறித்து தனிக் கவனம் செலுத்த வேண்டும். இப்பணிகளை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் செய்கின்றனரா என்பதை வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினார்.