லத்தேரி அருகே மாடு விடும் விழா; 15 பேர் காயம்

லத்தேரியை அடுத்த மாளியப்பட்டு கிராமத்தில் உள்ள தோசாலம்மன் திருவிழாவை முன்னிட்டு மாடுவிடும் விழா நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக 145 மாடுகள் கொண்டுவரப்பட்டன. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு 5 மாடுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, 140 மாடுகள் அனுமதிக்கப்பட்டன. 

தொடர்ந்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, தாசில்தார் ச. சந்தோஷ், லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, ஊராட்சி மன்றத் தலைவி மு. லட்சுமி ஆகியோர் மாடுவிடும் விழாவைத் தொடங்கிவைத்தனர். பின்னர் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாகக் காளைகள் சீறிப்பாய்ந்தன. மாடுகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 பேர் மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் 5 காளைகள் காயமடைந்தன. போட்டியில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி