உள்ளி கூட்ரோடு அருகே லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்த போது வாகனத்தின் இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து ஆட்டோவை நிறுத்தி விட்டு ஓட்டுனர் கீழே இறங்கிய நிலையில் தீ மளமளவென ஆட்டோ முழுவதும் பரவியது.
இதனையடுத்து தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில், இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படடுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் குடியாத்தம்-ஆம்பூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் இந்த தீ விபத்து குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.