எனவே குடியாத்தம் நகராட்சியின் உள்ளூர் நீர்ஆதாரமான பசு மாத்தூர் நீரேற்று நிலையம் மற்றும் நகர்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் உள்ள சிறுமின்விசை பம்புகள் மூலம் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நகர்பகுதிகளில் உள்ள 323 சிறுமின்விசை பம்புடன் கூடிய ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குடிநீர் வினியோகம் செய்ய இயலாத பகுதிகளுக்கு நகராட்சி குடிநீர் வாகனம் மூலம் காலை, மாலை வேளைகளில் குடிநீர் சப்ளை செய்யப்படும். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.