பின்னர் அங்கிருந்து அறுபடை வீடான திருச்செந்தூர் திருப்பரங்குன்றம் ஆலயங்களுக்கு சென்றுள்ளனர். இன்று காலை சொந்த ஊரான பேர்ணாம்பட்டுக்கு திரும்பினர். காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அசோக்குமார் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பத்து சவரன் தங்க நகைகள் ரு. 1, 35 லட்சம் பணம் ஆகியவை மர்ம நபர்கள் திருடிசென்று இருப்பது தெரியவந்தது.
அது குறித்து அசோக் குமார் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.