குடியாத்தம்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

குடியாத்தம் அடுத்த தனகொண்டபல்லி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் ஜெயசீலன் (வயது 37). கூலித் தொழிலாளி. இவர் பெங்களூருவை சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அதே கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் ஜெயசீலன் தூக்கில் பிணமாக தொங்கினார். 

இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயசீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஜெயசீலன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி