பேரணாம்பட்டில் ஒற்றை யானை அட்டகாசம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சேராங்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை, நேற்று (பிப்ரவரி 22) முருகேஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை மிதித்து சேதப்படுத்தியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி