பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மலட்டாறு, கானாறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜீ மற்றும் போலீசார், சாத்கர் கிராமத்தில் கானாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய குபேந்திரன் (47), வெங்கடேசன் (65), சத்தியமூர்த்தி (30), யுவான் (55) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மணலுடன் 4 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.