வேலூர்: பேருந்து நிலையத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வீரராகவர் கோவில் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது 4 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

அதில் அவர்கள் காட்பாடியை சேர்ந்த சுந்தர் (வயது 42), திருவலத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (62), சேர்க்காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (68), திருவண்ணாமலை மாவட்டம் திருவழிநல்லூர் பகுதியை சேர்ந்த தாமோதரன் (47) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,500, செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி