குடியாத்தம் நகர காவல் உதவி ஆய்வாளர் வீராசாமி தலைமையிலான போலீசார் மற்றும் மாவட்ட தனிப்படை போலீசார் நேற்று (ஜன. 11) நரிமுருகப்பா தெருவில் சோதனையில் ஈடுபட்டனர். விற்பனைக்காக வைத்திருந்த 10 கிலோ குட்கா போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கோதண்டபாணி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.