இது குறித்து மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் முருகவேல் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினார். அதில் ராஜாக்கல் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்கிற மனோஜ் (20), செந்தில் (22) ஆகிய இருவரும் திருடியது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து பிரகாஷ் என்கிற மனோஜை போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே கீழ்ப்பட்டி கிராமத்தில் முனிஸ்வரர் கோவில் உண்டியலை உடைத்து திருடிய வழக்கில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவான செந்திலை போலீசார் தேடி வருகின்றனர்