குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கூட்டோடு பகுதியில், குடியாத்தம் டவுன் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் உப்பரப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த அக்பர் பாஷா (30), பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் என்பதும், இருவரும் சேர்ந்து குடியாத்தம் பகுதியில் பைக் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.