குடியாத்தம் பகுதிகளில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களை அடுத்து, மாவட்ட எஸ்பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், வெள்ளேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (47) மற்றும் சின்னாலப்பல்லி காந்திநகரைச் சேர்ந்த கோகுல்நாத் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.