அவரது ஏழு வயது மகன் சர்வேஷும் தந்தையை பார்த்து இறங்கி பாதை மாறி சென்றுள்ளார். இதனையடுத்து மாரிமுத்து மகன் காணாமல் போனது குறித்து ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொது ஒருவர் குழந்தையை அழைத்துச் சென்றது பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் வேலூர் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த பத்மநாபன் என்பவர் வேலூரில் நடக்கும் அவருடைய சகோதரியின் மகள் நிச்சயதார்த்ததிற்க்கு மாப்பிள்ளை வீட்டாரை அழைத்துச் செல்வதற்காக காட்பாடி ரயில் நிலையம் வந்த போது சிறுவன் சர்வேஷும் அவருடைய கையை பிடித்துக் கொண்டு சென்றுள்ளார். மண்டபத்திற்கு சென்ற பிறகுதான் உறவினரின் குழந்தை என நினைத்து தவறுதலாக அந்த குழந்தையை அழைத்து வந்தது தெரியவந்தது. பின்னர், காட்பாடி ரயில்வே காவல் நிலையம் அழைத்துச் சென்று அச்சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.