கம்மவான் பேட்டையில் சிறப்பு மனு நீதி நாள்

வேலூர் அடுத்த கணியம்பாடி அருகேயுள்ள ராணுவப்பேட்டை என்றழைக்கப்படும் கம்மவான்பேட்டை கிராமத்தில் அரசு பள்ளி மைதானத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் கம்மவான்பேட்டை (பாட்டாளி மக்கள் கட்சி) ஊராட்சிமன்ற தலைவர் கவிதா முருகன் தலைமையில் நடந்தது இதில் பாமக ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயலட்சுமி ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மனுநீதிநாள் முகாமில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி கலந்துகொண்டு 100 அடி உயர கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் இவ்விழாவில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர் இதில் கால்நடை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைதுறை ஆகிய பலதுறைகளின் சார்பில் கண்காட்சிகளும் நடத்தப்பட்டது.
பின்னர் பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ரூ. 1. 98 லட்சம்மதிப்பில் தையல் இயந்திரம், வேளாண் உபகரணங்கள், இஸ்திரி பெட்டிகள் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் இதில் திரளான பொதுமக்களும் பங்கேற்று மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி