பேரணம்பட்டு அடுத்த சிந்தகணவாய் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை சுகன்யா(34), திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் செல்லும் வழியில், பெங்களூரில் இருந்து வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.