பேரணாம்பட்டு அருகே எருக்கம்பட்டு அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து 2 வயது பெண் புள்ளி மான் ஒன்று வழித்த வறி தாமோதரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகுந்தது. இது குறித்து கிராம மக்கள் பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த உடனே வனவர் முரளி மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று புள்ளிமானை மீட்டு நாய்க்கனேரி காப்பு காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.