வேலூர்: அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை; அமைச்சர் துரைமுருகன்

வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தலித்துகள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறார்கள் என்று ஆளுநர் பேசியுள்ளார் என கேட்டதற்கு, "ஆளுநர் அடிக்கடி இப்படிப்பட்ட கருத்துக்களை பேசி வருகிறார். ஆளுநருக்குரிய மாண்பையும் மரியாதையும் இழந்துவிட்டு முச்சந்தியில் சண்டை இடுவது போல், ஆட்சியிடம் சண்டையிட்டு வருகிறார், ஆளுநர். அதனால், எங்களுக்கு நட்டம் அல்ல. 

அவருக்கு வேண்டுமானால் லாபமாக இருக்கலாம். ஆகவே, கவர்னர் ஒரு அரசியல் வாதியாக செயல்படுகிறார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்". அண்ணாமலை உங்களுக்கு ரிட்டயர்மென்ட் கொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளாரே, "அவருடைய நல்ல எண்ணத்திற்கு நன்றி. பொதுவாக அவர் என்னைப் பற்றி எப்போதும் பேச மாட்டார். இப்போது என்னவோ அவர் பேசியிருக்கிறார் ஆனால் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்," என்றார்.

தொடர்புடைய செய்தி