கே. வி. குப்பம் அருகே, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினர் சம்மதமின்றி தனது மகள் ஸ்வேதாவைக் காதல் திருமணம் செய்துகொண்ட மருமகன் ராகவனைக் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக மாமனார் அமுல்ராஜ் மற்றும் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை ராகவனை 5 பேர் கொண்ட கூலிப்படை கொலை செய்தது. விசாரணையில், மகளைக் காதல் திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதால் கொலை செய்ததாக அமுல்ராஜ் தெரிவித்துள்ளார்.