கே. வி. குப்பம் தாலுகா அலுவலகத்தில் பிப்ரவரி மாதத்திற்கான தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வேளாண்மை, ஊரக வளர்ச்சி, தோட்டக்கலை, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை மனுவாக அளித்தால் விவாதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் பலராமன் தெரிவித்துள்ளார்.