அதைத்தொடர்ந்து மருத்துவக் குழுவினர் மற்றும் குடியாத்தம் தாலுகா காவல் நிலைய போலீசார், புகாருக்குள்ளான கிளீனிக்கில் சோதனை செய்துள்ளனர். அப்போது மஸ்தான் (40) என்பவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவரது கிளினிக்கில் இருந்து ஊசி மற்றும் மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.