வேலூரில் யானை தந்தங்களை கடத்தியவர்கள் கைது

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே சாத்கர் மலையில் 2 மாதங்களுக்கு முன்பு இறந்த 3 காட்டுயானைகளில் ஒன்றின் தந்தங்கள் திருடு போனது. இது தொடர்பாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில், சித்தூர் மாவட்டம் பலமநேர் வனச்சரக கிராமத்தில் யானை தந்தங்களை மறைத்து வைத்திருந்த இ. சந்திரபாபு (47) மற்றும் பி. சந்திரபாபு (42) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி