குடியாத்தம் அருகே வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக செயல்பட்டு காயமடைந்தவர்களை காரில் இருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.