வேலூர்: பேருந்து கவிழ்ந்து விபத்து - பலருக்கு காயம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து தனியார் பேருந்து மூலம் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மருவத்தூர் செல்வதற்காக இன்று (ஜனவரி 8) கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து புறப்பட்டு வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பேரணாம்பட்டு அடுத்த பத்தலபள்ளி மலைப்பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மலைப்பாதையில் கவிழ்ந்தது. 

இதில் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி