காட்பாடி விருதம்பட்டு பகுதியில் உள்ள BRA தெருவில் வசிக்கும் தனியார் மருத்துவமனையின் ஊழியர் இரவு பணிக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று (ஜூலை 31) அதிகாலை அடையாளம் தெரியாத வாலிபர் அவர் வீட்டின் முன்பு இரும்பு கதவினை திறந்து உள்ளே சென்று பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.