கே வி குப்பம் சுற்று வட்டார பகுதிகளில் ஒற்றை யானை அட்டகாசம்

கே. வி. குப்பம் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள், காட்டு விலங்குகள் அடிக்கடி வந்து பயிர்களைச் சேதப்படுத்தியும், விவசாயிகளை அச்சுறுத்தியும் வருகின்றன. இந்த நிலையில், கே. வி. குப்பத்தை அடுத்த பனமடங்கி, தொண்டான்துளசி, மாளியப்பட்டு, காளாம்பட்டு, கீழ்முட்டுக்கூர் உள்ளிட்ட கிராமங்களில் ஒற்றையானை விளைநிலங்களில் புகுந்தது.

 இந்த யானை அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், பழனி ஆகியோரின் நிலங்களில் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ள விவசாய நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தி உள்ளது. வனத்துறையினர் அங்கு சென்று, மேளங்கள் அடித்தும், பட்டாசு வெடித்தும் விரட்டியடித்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறையினர், கே. வி. குப்பம் வருவாய் துறையினர் விவசாய நிலங்களுக்குச் சென்று, சேதமான பயிர்களைப் பார்வையிட்டு பாதிப்பின் அளவு குறித்து மதிப்பீடு செய்தனர்.

தொடர்புடைய செய்தி