வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் விநாயகமூர்த்தி வேலூர் தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும், காட்பாடி தாலுகா முதுநிலை வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் அணைக்கட்டு வட்ட வழங்கல் அலுவலராகவும், வேலூர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கீதா குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலக தனித்துணை தாசில்தாராகவும், குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திக் பேரணாம்பட்டு தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், குடியாத்தம் தாலுகா முதுநிலை வருவாய் ஆய்வாளர் நந்தகுமார் கே.வி.குப்பம் தலைமையிடத்து
துணை தாசில்தாராகவும், ஆட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த் கே.வி.குப்பம் தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும், வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் முன்னாள் கண்காணிப்பாளர் தேவிகலா காட்பாடி தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும், வேலூர் தாலுகா தேர்தல் துணை தாசில்தார் நதியா வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தலைமை உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர் என்று ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.