மலேசியாவில் உயிரிழந்த தம்பி - கலெக்டரின் காலில் விழுந்த பெண்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் தமிழக அரசின் "ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர்" நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மனு அளிக்க வந்த பெண் ஒருவர் திடீரென கதறி அழுதவாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அவர்களின் காலில் விழுந்து கண்ணீர் வடித்தபடி கதறினார். அவருடன் வந்திருந்தவர்களும் அழுதவாறு மனு அளித்தனர். இதில் ஒருவர் மயங்கி விழுந்ததில் 108 ஆம்புலென்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், காட்பாடி அடுத்த சேவூர் பகுதியை சேர்ந்தவர் அனுன் தேவராஜ் (37) எலக்ட்ரீசியன் வேலை தேடி கடந்த மார்ச் மாதம் மலேசியா சென்ற நிலையில் இன்று காலை திடீரென அங்கு உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்டுத்தரக்கோரி உயிரிழந்த அனுன் தேவராஜன் சகோதரி விக்டோரியா மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மனுத்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கூறுகையில், இது தொடர்பாக இங்கிருந்து தூதரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி