இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்கு வாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நவீன்குமார் மறைத்து வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து சேகரின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து நவீன்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் திருப்பதியில் இருந்து ரெயிலில் வேலூருக்கு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் காட்பாடி ரயில் நிலையத்தில் வைத்து நவீன்குமாரை கைது செய்தனர்.